×

திருத்தணி தொகுதி வேட்பாளர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவுவதாக உறுதி: வேட்பாளர் கோ. அரி கிராமங்களில் வாக்குசேகரிப்பு

திருத்தணி, ஏப்1: திருத்தணி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்  கோ அரி, ஆர்கே பேட்டை வட்டத்திற்குட்பட்ட கோபாலபுரம் பெரிய ராமாபுரம் விடியங்காடு பை வலசா மைலர் வாடா உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். செங்கல் சூளை விவசாய நிலங்கள் சென்று  விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு ஆர்த்தி எடுத்தோம் மலர்கள் தூவியும் பூமாலைகள் அணிவித்து தேங்காய் உடைத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பொதுமக்களிடம் முதியோர் உதவித்தொகை பெறும் பெண்கள் அதிமுக ஆட்சி பீடத்தில் ஏறியதும் குடும்ப பெண்கள் ஆண்டுக்கு சமையல் செய்வதற்கு இலவசமாக 6 சிலிண்டர் பெறுவார்கள், இதுவரை ரூ. 200  கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டது. உங்களுக்கு இனி இலவசமாக கேபிள் இணைப்பு வழங்கப்படும். குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் ரூபாய் 1500 தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இப்படி எண்ணற்ற சாதனை செய்வதற்காக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்காக அறிவித்துள்ளது.

 எனவே மீண்டும் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் தொடர்ந்திட இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்கும்படி தங்களை வணங்கி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். அப்போது அவருடன் மாவட்ட ஆவின் பால் வளத் தலைவர் வேலஞ்சேரி கவி சந்திரன், மாவட்ட கவுன்சிலர் பெரிய நாக பூண்டி கோகுமார், இளங்கோவன். எஸ்எம் மாணிக்கம் பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்த குப்புசாமி, விஜயன், முனுசாமி, பாஜவைச் சேர்ந்த துரைராஜ் ராமமூர்த்தி புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த செல்வம் ரமேஷ் உள்பட ஏராளமானோர் உடன் சென்று வாக்காளர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர். திருத்தணி அடுத்த அமிர்தாபுரம் ராஜாதேசிங் நகரில், பிளஸ்2 மாணவி சான்மா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடும் வலியால் தினமும் சிரமப்பட்டு வந்தார். தற்போது மருத்துவ செலவுக்கும், குடும்பம் நடத்துவதற்கு போதிய வருவாய் இல்லாமல் சான்மாவின் தாய் ரம்ஜானி கடும் சிரமப்பட்டு வந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திருத்தணி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.பி., திருத்தணி கோ. அரி நேற்று காலை சான்மாவின் வீட்டிற்கு நேரில் சென்று,  மருத்துவத்திற்கு தேவையான  உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார். மேலும் தேவையான  மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தருவதாக உறுதி கூறி சான்மா மற்றும் ரம்ஜானிக்கு ஆறுதல் கூறினார். நிகழ்ச்சியின் போது அ.தி.மு.க., திருத்தணி ஒன்றிய செயலாளர் இ.என்.கண்டிகை ரவி உள்பட முக்கிய கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Tags : Trivandrum ,Ari ,
× RELATED மல்லுவுட்டுக்கு சவால் விடும் ஒரு நொடி; ஆரி நம்பிக்கை